உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-03-30 14:48 IST   |   Update On 2022-03-30 14:48:00 IST
போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம், சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை  சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு அப்பள்ளித்   தலைமை  ஆசிரியர் சின்னதுரை  தலைமை  தாங் கினார்.

ஊராட்சித்தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள்,  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு, போதைப் பொருட்கள் பழக்கத்தினால் மாணவர்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகிறது. படிப் பில்  கவனமின்மை,  தூக்க மின்மை, கண் எரிச்சல், உடல் நடுக்கம்,  குழப்பமான  மனநிலை,  கல்வியில்  ஆர்வம் இல்லாதது போன்ற அறிகுறி கள் தென்படுகின்றன.

இத்தகைய பழக்கங்களுக்கு அடிமையாகி மாணவ, மாணவிகள் தங்களது வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர். எனவே இப்பழக்கத் துக்கு அடிமையாகமால் படிப்பில் சிறந்து விளங்கி, தங்களது லட்சியத்தை அடைய  வேண்டும்  என்று அறிவுறுத்தினர்.

Similar News