உள்ளூர் செய்திகள்
கண்டியாநத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி நடந்தது.
முகாமினை ஊராட்சித் தலைவர் செல்விமுருகேசன் தொடங்கி வைத்தார். பொன்னமராவதி துர்கா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், போன்றவைகள் செய்து மருந்து மாத்திரை வழங்கினார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. இதில் தலைமையாசியர் சுபத்ரா, வார்டு உறுப்பினர் அழகப்பன், ஊராட்சி செயலர் அழகப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.