உள்ளூர் செய்திகள்
அரியலூர் அருகே ராம்கோ சிமெண்ட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தபோது

ராம்கோ சிமெண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

Published On 2022-03-29 15:35 IST   |   Update On 2022-03-29 15:35:00 IST
அரியலூர் ராம்கோ சிமெண்டு ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில்  மருத்துவ  ஆக்சிஜன்ஆலை  மற்றும்  நல்லாம்பத்தை கிராமத்தில் சுகாதார வளாகத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்து,  மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்னர். உலகளாவிய கொரோனாவின் இரண்டாவது அலையின்போது மருத்துவ பிராணவாயு  ஆலை மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு ராம்கோ நிறுவனத் தலைவர் ராம்கோ குழுமத்தின் அனைத்து சிமெண்ட் உற்பத்தி ஆலை களிலும் மருத்துவ பிராணவாயு ஆலையினை அமைத்து தருவதாக தெரிவித்தார்.

அதன்படி, ராம்கோ நிறுவனத்தின் ஆர்.ஆர்.நகர் ஆலையில் அமைத்தபின்னர், தற்பொது அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் சிமெண்ட் ஆலையில் மருத்துவ பிராண வாயு ஆலை அமைத்து தற்சமயம் உற்பத்திக்கு தயாராக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

இதிலிருந்து  உருவாகும் மருத்துவ  பிராணவாயு அரியலூர்  மற்றும்  அதன் சுற்றுப்புறப்  பகுதிகளின் தேவையினை பூர்த்தி செய்ய உதவும். இந்த ஆலை மட்டு மில்லாது, ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனை உப யோகத் திற்கு 70அ3 கொள் ளளவு கொண்ட மருத்துவ பிராணவாயு சேமிப்பு தொட் டியினையும் நன்கொடை யாக அளித்துள்ளது.

நிகழ்ச்சியில், ராம்கோ நிறுவன ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்தத் துணைத்தலைவர் (நிர்வாகம்) எஸ்.ராமராஜ், உதவி துணைத்தலைவர் வெங்கட்ராமன், பொது மேலாளர் ஜான்சன், மகேஷ், கணேஷ்ராம், மக்கள் தொடர்பு அலுவலர் முருகானந்தம் உட்பட ராம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News