உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர் முதல் கூட்டத்தில் தலைவரிடம் கோரிக்கையை முன் வைத்து கவுன்சிலர்கள் பேசியபோது எட

ஜெயங்கொண்டம் நகராட்சி முதல் கூட்டம் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கை முன்வைப்பு

Published On 2022-03-29 15:32 IST   |   Update On 2022-03-29 15:32:00 IST
ஜெயங்கொண்டம் நகராட்சியின் முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் வார் டுகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் பற்றாக்குறை தெருவிளக்கு உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். ஆணையர்  சுபாஷினி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கருணாநிதி வரவேற்றார். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் ஷகிலாபானு வாசித்தார்.

நகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு, நகராட்சி அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் துவங்கும்போது உறுப்பினர்கள் சிலர் தங்களது கட்சித்தலைவர்கள் சிலரை புகழ்ந்து பேசினர்.   

இதுபோன்று இல்லாமல் நேரடியாக கோரிக்கைகளை தங்கள் பகுதியில் செய்யவேண்டிய  பணிகள் பற்றி மட்டும் பேசவேண்டும் என மாற்று கட்சியில் சிலர் கூறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதங்கள் அதிகமாகி சலசலப்பு ஏற்பட்டது. பின்னர்மீண்டும் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் கோரிக்கைகளை கூறினர்.

உறுப்பினர் செல்வராஜ் உறுப்பினர்கள் கோரிக்கைகளை கூறும்போது, அதற்கான விளக்கம் அளிப்பதற்கு அதற்குரிய அலுவலர்கள் அலுவலகத்தின் உள்ளே இருந்து அளிக்க வேண்டும் எனக்கூறினார்.

உறுப்பினர் தங்கபாண்டியன் செங்குந்தபுரம் சாலை வசதி, குடிநீர் மேல்நிலை    நீர்த்தேக்க தொட்டி, தெருவிளக்குகள் அமைக்க வேண்டியது பற்றி கோரிக்கை விடுத்தார்.

உறுப்பினர் சுப்பிரமணியன் பேசுகையில், செங்குந்தபுரம் பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் வரி வதிப்பு அதிக தொகை ஏற்றப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்றார். உறுப்பினர் ரங்கநாதன், கீழக்குடியிருப்பு மயானக் கொட்டகை பகுதியில் மின் விளக்கு அமைக்கவேண்டும், கீழக்குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதை சரி செய்யவேண்டும் என்றார்.

கவுன்சிலர்களுடன் வார்டு பகுதிகளுக்கு ஆணையர் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிமனை ரசீது போடு வதற்கு தாமதம் ஆவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

ஆணையர் பேசும்போது, புதிய தெரு விளக்குகள் அமைப்பது குறித்து தீர்மானம் வைத்து விளக்குகள் அமைக்கப்படும். நாற்பத்தி ஒரு சதம் மட்டுமே இதுவரை வரி வசூல் ஆகியுள்ளது. மீதமுள்ள வரி வசூல் செய்யப்படுவது அலுவலர்களுடன் கவுன்சிலர்களும் சென்று 100 சதம் வரி வசூலை முடிக்க நகராட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Similar News