உள்ளூர் செய்திகள்
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் சரகம், சேந்தன்குடி பகுதியில் 53.02.5 ஹெக்டேர் பெரியாத்தாள் ஊரணி என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலத்தில் கடலை, மலர், தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடி மூலமாக பல்வேறு நபர்கள் 24 ஹெக்டேர் பரப்பு நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமித்து செய்து வந்தனர்.
நீர்நிலை புறம்போக்குக ளில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி, மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் கடந்த 24.03.2022 மற்றும் 26.03.2022 ஆகிய இரு நாள்களில் 5 ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் பணிகள் நடைபெற்றன.
ஆலங்குடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர், ஆலங்குடி வட்டாட்சியர் மற்றும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் 24 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்படும் எனவும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைப்புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ளவேண்டும்.
இதில் தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அரசு சார்பில் அகற்றி, அதற்குரிய செலவினங்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.