உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றிய காட்சி.

காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-03-29 14:54 IST   |   Update On 2022-03-29 14:54:00 IST
காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணி துறை கடுப்பாட்டில் ஏரி உள்ளது. 

இந்த ஏரியில் அதே பகுதிகளை சேர்ந்த சில விவசாயிகள் ஏரியின் இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். 

இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த ரூ.40 லட்சம் அரசு நிதி ஒதிக்கியுள்ளது.

இதனால் ஏரியின் ஆக்கிரமிப்பு இடங்களை நெமிலி தாசில்தார் ரவி முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Similar News