உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மாணவிகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு தேவை- டாக்டர் பேச்சு

Published On 2022-03-29 14:42 IST   |   Update On 2022-03-29 14:42:00 IST
மாணவிகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு தேவை என டாக்டர் அறிவுரை வழங்கினார்.
வேலூர்:

வேலூர் தோட்டப் பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது. 

இதில் மகப்பேறு மருத்துவர் சுமிதா லட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:-

பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வேண்டும். மாணவ மாணவிகள் பேட் டச் குட் டச் குறித்து தெரிந்திருக்கவேண்டும். தங்களை பாதுகாத்து கொள்ள தெரியவேண்டும். 

ஒருவர் தொடுகிறார் என்றால் அவர் எதற்காக தொடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 124 நாள் புகார்கள் வந்தன. 2019-ம் ஆண்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் 500-ஆக அதிகரித்தது.

15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 லட்சம் பேருக்கு புதிதாக எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் குறித்த கல்வி விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். 

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கவிதா குமாரவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News