உள்ளூர் செய்திகள்
சாலையோர வாழ்த்து பதாகையை பார்த்து திருமண வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறிய அமைச்சர் மெய்யநாதன்
சாலையோர வாழ்த்து பதாகையை பார்த்து திருமண வீட்டிற்கு சென்று அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் & கரம்பக்காடு முத்து மாரியம்மன்கோவிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் ரூ.30 லட்சம் நிதியை திருப்பணிக்காக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி வழியாக சென்ற போது, ஒரு திருமணத்திற்காக பந்தல் போடப்பட்டு பதாகையும் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே அந்த வழியாகச் சென்ற அமைச்சர் திடீரென காரை நிறுத்தச் சொல்லி அந்த காலனிக்குள் சென்று மண மக்களை அழைத்து வாழ்த்தியதுடன் பரிசும் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறை களை கேட்டுஉடனே குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அமைச்சருக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஆனால் அவர் படம் வைத்து பதாகை வைத்திருந்தோம். அந்த பதாகையை பார்த்து வந்து மணமக்களை அமைச்சர் வாழ்த்தி, எங்கள் காலனி மக்களின் குறைகளை கேட்டது ரொம்ப மகிழ்ச்சி யாக இருந்தது என்றனர்.