உள்ளூர் செய்திகள்
.

சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்களில் கூடுதல் ஏ.சி பெட்டி இணைப்பு

Published On 2022-03-29 06:15 GMT   |   Update On 2022-03-29 06:15 GMT
சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்களில் ஏசி பெட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சேலம்:

ரெயில்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் மற்றும் கோடை காலம் என்பதாலும் ரெயில்வே நிர்வாகம் சேலம், ஈரோடு, கோவை வழியாக செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்துள்ளது.
 
அதன்படி   கோவை- நிஜாமுதீன் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் (12647) மற்றும் நிஜாமுதீன் -கோவை கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ்(12648) ஆகிய ரெயில்களில்  மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஹத்தியா- எர்ணாகுளம் வாராந்திர (22837) எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்- -ஹத்தியா வாராந்திர (22838) எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில்  மூன்றடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News