உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாணாவரம் அருகே புதுப்பென் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-03-28 15:00 IST   |   Update On 2022-03-28 15:00:00 IST
பாணாவரம் அருகே புதுப்பென் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த சூரை கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (26).

இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் லிப்ட் ஆப்பரேட்டிங் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா (19). இருவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூரை கிராமத்தில் உள்ள தங்கள் நிலத்தின அருகே உள்ள  மரத்தில் பூர்ணிமா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 1 வருடமே ஆனதால் அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ. பூங்கொடி ஆகியோர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News