உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் மகளிருக்கான கபாடி போட்டி
அறந்தாங்கியில் மகளிருக்கான கபாடி போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையில் மகளிர் கபாடி போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்த 18 அணியினர் கலந்து கொண்டனர்.
லீக் அடிப்படையில் மொத்தம் 34 சுற்றுகளாக நடை பெற்ற கபாடி போட்டியில் பெண்கள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.
சனி, ஞாயிறு என இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த கபாடி போட்டியை பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான கபாடி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கபாடி போட்டியில் கலந்து கொண்ட பெண் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி கண்டு ரசித்தனர்.
பெண்கள் கபாடி போட்டியில் 1-வது பரிசு வெற்றி பெற்ற சென்னை சிட்டி போலீஸ் அணியினருக்கு ரூ.25 ஆயிரமும், 2வது பரிசு வென்ற சென்னை தமிழ்நாடுபோலீஸ் அணியினருக்கு ரூ.15 ஆயிரமும், 3வது பரிசு வென்ற திருநெல்வேலி, 4வது பரிசு வென்ற ஒட்டன்சத்திரம் அணியினருக்கு தலா 8 ஆயிரமும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் 10 ஆயிரம் மதிப்புள்ள நினைவு கோப்பைகள் சமூக ஆர்வலர் சதாம் உசேன் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏகே அய்யா, மாரிமுத்து, கிருஷ்ணன், செய்யது முகமது, முத்துவீரன் உள்ளிட்ட ரெத்தினகோட்டை கிராமத் தார்கள் செய்திருந்தனர்.