உள்ளூர் செய்திகள்
ரத்ததானம் வழங்கிய காட்சி.

ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-03-28 12:07 IST   |   Update On 2022-03-28 12:07:00 IST
ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை, மார்ச்.28-

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் மாவிரன் பகத்சிங்கின் நினைவுதினத்தை ரத்ததானம் வழங்கும் நிகழ்வாக  நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க நரகத் தலைவர் ஏ.டேவிட், மாணவர் சங்க நரகத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

ரத்ததான முகாமை எம்.எல்.ஏ. சின்னதுரை தொடங்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியவர்களுக்கு, சான்றிதழை வழங்கி அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, கோட்டாட்சியர் கருணாகரன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற உறுப்பினர் மூர்த்தி, மருத்துவர்கள் ராமு, கார்த்திக்தெய்வநாயகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

 வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர்  துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் அருண், வினோத், ஜீவா, மாணிக்கம், சந்தோÔ¢, ஓவியா, கார்த்திகா, மகாதீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 91 பேர் ரத்த தானம் செய்தனர்.

Similar News