உள்ளூர் செய்திகள்
வேளாண் மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர்.

காவேரிப்பாக்கம் அருகே வேளாண் மாணவிகள் கண்காட்சி

Published On 2022-03-27 14:41 IST   |   Update On 2022-03-27 14:41:00 IST
காவேரிப்பாக்கம் அருகே வேளாண் மாணவிகள் கண்காட்சி நடந்தது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம்காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் தங்கி கிராம வேளாண் பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர்.

இந்த வேளாண் பயிற்சி முகாமிற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு முகாமில் தங்கி உள்ள கல்லூரி மாணவிகள் தாங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட உரம் நெல் பயிர்கள் மற்றும் அனைத்து பொருட்கள் தயாரித்தை கலெக்டரின் எடுத்துரைத்து கூறினார்.

பின்னர் மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் விவசாயம் என்பது நாம் கற்றறிந்த விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்கனும் அதே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ந்து கொண்டு இருக்கின்றது அதை நாம் விவசாயத்தோடு புகுத்தனும் என்றும் கூறினார். மேலும் இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பேசிய ஆட்சியர் விவசாயம் வந்த பின்புதான் மனிதனுக்கு நாகரிகம் வளர்கின்றது இன்றைக்கு பார்த்தால் தொழில்மனதால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதன் வளர்ச்சிகள் விவசாயத்தைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது.

பொருளாதாரத்திலும் அதில் பணிபுரியும் நபர்களின் சதவீதத்திலும் அதிகம் இடம் பெற்றிருந்தாலும் கூட விவசாயிகள் இல்லை என்றால் நாம் நிச்சயம் இல்லை என்று கூறினார்.

மேலும் மேடையில் இருந்த மாவட்ட ஆட்சியர் உடன் தூய்மைப் பணியாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை பெண்கள் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் மாவட்ட ஆட்சியருடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்..

பின்னர் பள்ளியின் உள்ளே சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு இருக்கும் மாணவ மாணவிகளிடம் கல்வியை பதில் உங்கள் வாழ்க்கையில் நன்றாக முன்னேறுங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறீர்கள் என்று படித்து முன்னேறுவேன் என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன் பின்னர் பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தனது நோட்டுப் புத்தகத்தில் ஆட்டோகிராப்பை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்த நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் நெமிலி வட்டாட்சியர் ரவி கல்லூரியின் முதல்வர் மரியசூசை அய்யம்பேட்டைசேரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News