உள்ளூர் செய்திகள்
பூஜையுடன் சிறப்பு ஹோமம் நடந்த போது காட்சி.

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு மண்டல பூஜையுடன் சிறப்பு ஹோமம்

Published On 2022-03-27 14:29 IST   |   Update On 2022-03-27 14:29:00 IST
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு மண்டல பூஜையுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சென்ற 6.2.2022 ஞாயிற்றுக்கிழமை 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இதனை முன்னிட்டு இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜைடன் ஹோமங்கள் மற்றும 9 வகையான திரவியங்களை கொண்டு மூலவர் ஸ்ரீ கருட தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Similar News