உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடந்தது.
வேலூர்:
காட்பாடியில் உள்ள மாநகர அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார்.
தேர்தல் பொறுப்பாளர்களாக ,மாநில மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வேலூர் மாநகர ஒன்றிய பகுதி பேரூராட்சி செயலாளர், நிர்வாகிகள் 126 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. ஒன்றிய, பகுதி செயலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி செயலாளர்களுக்கு ரூ.2500 தேர்தல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மதியம் வரை 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மண்டல தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ்,பி.எஸ்.பழனி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. ராணிப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் நடந்தது.
இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு திருவண்ணாமலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும், தெற்கு மாவட்டத்திற்கு செய்யாறில் உள்ள கட்சி அலுவலகத்திலும் அமைப்பு தேர்தல் நடந்தது.