உள்ளூர் செய்திகள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2022-03-27 12:28 IST   |   Update On 2022-03-27 12:28:00 IST
கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் அசோக்ராஜன் தலைமை தாங்கினார்.

கணினி இயல் துறை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். முகாமில் பேரிடர் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின் பொருட்கள் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் சிறப்பு விருந்தினராக உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் கலந்துகொண்டு தூய்மை பணியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் வீரப்பன், பேராசிரியர் சையது ஆலம், பால விநாயகம், ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News