உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2022-03-27 12:17 IST   |   Update On 2022-03-27 12:17:00 IST
வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் திருச்சி  கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளிடமிருந்து பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையை செலுத்தியவர்களுக்கு குலுக்கல் மூலம் குடியிருப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  

ஆனால் பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையினை செலுத்தாமல் குடியிருப்புகள் வேண்டாம் என்று சம்மதக் கடிதம் அளித்துள்ள பயனாளிகளை நீக்கம் செய்து மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், புதுக்கோட்டை அலுவலகம் (கவிநாடு மேற்கு திட்டப்பகுதி மவுண்ட் சீயோன் பள்ளி செல்லும் வழி, இரயில்வே நிலையம் அருகில்) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.95,500 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் உதவிப்பொறியாளர் அலைபேசி எண் 9790382387, தொழில்நுட்ப உதவியாளர்கள் அலைபேசி எண் 9159500840, 8973026147 என்ற எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News