உள்ளூர் செய்திகள்
சிவராஜ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்த காட்சி.

பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினர் உண்ணாவிரதம்

Published On 2022-03-27 06:24 GMT   |   Update On 2022-03-27 06:24 GMT
தியாகி பென்சன் வழங்கக்கோரி பிரெஞ்சிந்திய விடுதலைக்கால இயக்கத்தினர் உண்ணா விரதம் இருந்தனர்.
புதுச்சேரி:

பிரெஞ்சு குடியுரிமை இழந்த புதுவை பூர்வீக குடிமக்களுக்கு மத்திய தியாகி பென்சன் வழங்கக்  கோரி பிரெஞ்சிய இந்திய புதுவை பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் பல ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரெஞ்சு குடியுரிமை இழந்தவர்களுக்கு உடனடியாக தியாகி பென்சன் வழங்கிட மத்திய-மாநில அரசுகளுக்கு நினைவூட்டும் வகையில் பிரெஞ்சிய இந்திய புதுவை பிரதேச விடுதலைகால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் புதுவை காமராஜர் சாலையில் புதுவை சிவம் சிலை சதுக்கம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு இயக்க துணைத்தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை இயக்க நிறுவன தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக  புதுவை சிவம் சிலை சதுக்கம் அருகே உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. மேலும் புதுவை சிவம் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இயக்க துணைத்தலைவர்கள் அருணாசலம், சுப்பிரமணி, புருசோத்தமன், ரகுராமன், பொதுச் செயலாளர் தீனதயாள ரெட்டியார், செயலாளர்கள் அருணகிரி, தம்பி ராஜேந்திரன், கண்ணையன், பிற்படுத்தப் பட்டோர் அணி கலியமூர்த்தி, தொழிலாளர் அணி அமைப் பாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட் டத்தில் பொதுச்செயலாளர் சதாசிவம்ரெட்டியார் தீமானங்கள் வாசித்தார். அதில் பிரெஞ்சு குடியுரிமை இழந்தவர்களுக்கு தியாகி பென்சன் வழங்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியும், புதுவை அரசு செவிசாய்க்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது,  வரும் காலங்களில் உண்மையான இதுபோன்ற தவறுகள் திருத்தப்பட்டு முறையான விசாரணை நடத்தி பிரெஞ்சு குடியுரிமை இழந்த தியாகிகளுக்கு கவர்னர் தமிழிசை பென்சன் வழங்கி மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News