உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. பிரமுகர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
நாகையில் பா.ஜ.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை கொட்டுப் பாளைய தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). இவர் நாகை நகர பா.ஜ.க. துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இது தவிர அந்த காலனியில் உள்ள மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் உதயகுமார் தூங்கி கொண்டிருந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார் 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானதையும், வீட்டின் முன்பகுதி எரிந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்ர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப் பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.