உள்ளூர் செய்திகள்
அறிவியல் மற்றும் அடல் ஆய்வக கண்காட்சியை ஆர்வமுடன் பார்க்கும் மாணவிகள்.

புதுக்கோட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-03-26 15:08 IST   |   Update On 2022-03-26 15:08:00 IST
புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை  மவுண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் அறிவியல்  மற்றும் அடல் ஆய்வக கண்காட்சி பள்ளியின் தலைவர் டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன், துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தலைவர்  மாணவர்கள் இந்தியாவின்   வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற   வேண்டும். அதற்கு அறிவியல் துறையில் சிறந்து விளங்கினால் தான் இயலும்.

அதற்கு மாணவர்கள் இது போன்ற  அறிவியல் கண் காட்சியில் அவர்களுடைய அறிவியல் கண்டு பிடிப்பை காட்சி படுத்தமற்றும் ஊக்கப் படுத்த இது ஒருவாய்ப்பாகும்.

கல்வி என்பது  மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய   ஒருகளம், சிந்தனையை விரிவு படுத்த வேண்டும் குறுகிய வட்டத்தில் இல்லாமல்  சிறந்த சிந்தனையாளராக நம்மை மாற்றுவது கல்வி எங்கு படிக்கின்றோம்   என்பது முக்கியம் அல்ல எப்படி படிக்கின்றோம் என்பதே முக்கியம் என்று உரையாற்றினார்.  

பள்ளியின் துணைத்தலைவர்  மாணவர்கள் தங்களு டைய இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அதற்கு தகுந்த கல்வி நிறுவனத்தை தேர்ந் தெடுப்பது பெற்றோரின் கடமை. மேலும் தங்களுடைய குழந்தைகள் எந்த படிப்பில் ஆர்வமாக உள்ளார்களோ அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்  என்றார்.  

பள்ளி முதல்வர் பேசுகையில் மாணவர்களின் ஆர்வத்தை பாராட்டியும்  அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்த தலைமையாசிரியருக்கு நன்றியையும் தெரிவித்து வரும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று பள்ளியில் நடைபெற இருக்கின்ற அடல் சம்மந்தமான மெகா கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்களும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தலாம் என்றார்.

மேலும்  மாணவர்கள் இந்தியா நாட்டை  உலக அரங்கில் வலிமை உடைய தாகவும்  மற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக விளங்க செய்யவேண்டும். அதற்கு மாணவர்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.  

பள்ளி மாணவர்கள் தங்க ளுடைய அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். அதை மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள்  அரசுபள்ளி மாணவர்களுக்கு அதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை எடுத்துரைத்தனர்.   

இந்நிகழ்ச்சியில் லெம்பலக்குடி அரசுமேல்நிலைப்பள்ளி, நச்சாந்துபட்டி  ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, புலிவலம்அரசுநடு நிலைப்பள்ளி, நமணசமுத் திரம்  மு.சி.த.மு. உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.

நிகழ்ச்சி  ஏற்பாடுகளை பள்ளி அடல் ஆய்வக பொருப்பாளர்  பியர்சன் பிரிஸ்ட்லி ஜாப் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சரண்குமார் ஆகியோர்  செய்திருந்தனர்.

Similar News