உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க

மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-03-26 15:04 IST   |   Update On 2022-03-26 15:04:00 IST
புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சைபர்  கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா கலந்துக் கொண்டு சைபர்  கிரைம் குற்றங்கள்  தொடர்பான  விழிப்புணர்வு கையேடுகளை மாணவ ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.  

அவர் பேசுகையில், செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், செல்போனில் ஆன்லைன் விளையாட்டை  விளையாடும் போது வரும் தேவை இல்லாத லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் என்றார்.  

மொபைல் போனை ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மொபைல்போனில் தவறுதலாக மெசேஜ் வந்தால், பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்,  இணையதளம் மூலம் நிதி மோசடி,

சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது பற்றியும் பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து இணையதளத்தில் புகார் அளிக்கலாம் , மேலும் 1930 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கூறினார்.

கல்லூரி  தாளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் மற்றும் பி.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர் திருமலையரசன் நன்றி கூறினார்.  

நிகழ்ச்சியில் அனைத்து மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News