உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் நாளை அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்

Published On 2022-03-26 14:32 IST   |   Update On 2022-03-26 14:32:00 IST
வேலூரில் நாளை அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது.
வேலூர்:

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக வேலூர் மாவட்டம் உள்பட 25 மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

மேலும் வேலூர் மாநகர மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காட்பாடியில் உள்ள வேலூர் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் நாளை காலை அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. 

இதில் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இது சம்பந்தமாக இன்று மாலை காட்பாடி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் நாளை ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

ஜோலார்பேட்டையில் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி கந்திலி ஜோலார்பேட்டை பகுதி நிர்வாகிகள் வாணியம்பாடியில் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் மாதனூர் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

Similar News