உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் தூய்மைப் பணி திட்டம் தொடக்கம்
ராணிப்பேட்டையை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் தூய்மைப் பணி திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி நெகிழி (பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள்) இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டையை மாற்றும் சிறப்பு தூய்மைப் பணி திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ராணிப்பேட்டை வாலாஜா சாலையோரம் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த தூய்மைப்பணி ராணிப்பேட்டை நகராட்சிக் குட்பட்ட 30 வார்டுகளிலும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலஷ்மி, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய்ந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர்மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் கருணாமூர்த்தி, நகர பொறுப்பாளர் பூங்காவனம், வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வாலாஜா நகரத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.