உள்ளூர் செய்திகள்
திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுந்தரராஜன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஊரக வளர்ச்சி திட்டபணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு

Published On 2022-03-26 13:05 IST   |   Update On 2022-03-26 15:01:00 IST
தா.பழூர் ஒன்றியத்தில் நடை பெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம்  அருகே தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் கீழ் நடை பெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.

அப்போது வெண்மான் கொண்டான் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு  வரும் சமுதாயசுகாதார வளாகத்தை திட்ட இயக்குனர்   ஆய்வு செய்தார்.

பின்னர்  பிரதம  மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.1.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், மாவட்ட ஊராட்சி 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.60 லட்சத்தில் வெண்மான்கொண்டான் பெருமாள் கோவில் தார்சாலை மற்றும்  பருக்கள் ஊராட்சியில்  அழிசுகுடி முதல் கீழவெளி வரை ரூ.18.64 லட்சத்தில்  அமைக்கப்பட்ட தார்சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது சாலை தரமாக அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து இருபுறமும் அளவீடு செய்யச் சொல்லி கணக்கீடு செய்தார். அதே ஊராட்சியில் நடை பெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக வருகிறதா என்பது குறித்து விளக்கம் கேட்டார்.

மேலும் பணிகள் முழுமையாக நடைபெறவேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் அறிவுரை வழங்கினார்.

Similar News