உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்

அண்ணா தொழிற்சங்க டிரைவர், கண்டக்டர்கள் அரசு பஸ்களை இயக்குவார்கள்- தலைவர் கமலக்கண்ணன்

Published On 2022-03-26 06:17 GMT   |   Update On 2022-03-26 07:43 GMT
அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது என்று தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் கூறினார்.
சென்னை:

நாளை மறுநாள் தொடங்கும் பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது:-

ஆளும் கட்சி தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மாநில அரசும் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை, சம்பள உயர்வு, ஓய்வூதியம் பெறுவோர் நிலுவை தொகை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளன. இதனால் மத்திய அரசை மட்டும் குறை கூறுவது ஏற்க முடியாது.

இதன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது. அனைத்து தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுவார்கள்.

பஸ்களை இயக்குவார்கள். அரசு போக்குவரத்து கழகங்களில் 50 முதல் 60 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் பணிகளில் போராட்ட நாட்களில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News