உள்ளூர் செய்திகள்
பஞ்சாயத்து தலைவர்களுடன் 2-வது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட முயற்சி- பஞ்சாயத்து தலைவர்களுடன் 2-வது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2022-03-25 16:57 IST   |   Update On 2022-03-25 16:57:00 IST
சட்டசபை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பஞ்சாயத்து தலைவர்களுடன் 2-வது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணா கிராம ஒன்றிய 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 8 மாதமாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்காததை கண்டித்து சட்டசபை முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக செல்ல முயன்றனர்.

இதனை அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுபடி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், அசோகன், நந்த குமார், ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் பஞ்சாயத்து தலைவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, தாசில்தார் சிவா.கார்த்திகேயன் ஆகியோர் உறுதியளித்தனர்.

இதனால் சமாதானம் அடைந்த பஞ்சாயத்து தலைவர்களை மீண்டும் நேற்று பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பி.டி.ஒ.க்கள் சித்ரா, விஜயா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News