உள்ளூர் செய்திகள்
மதுபானம் குடிப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி

கடலூரில் மதுபானம் குடிப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-03-25 15:24 IST   |   Update On 2022-03-25 15:24:00 IST
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் குடிக்காமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
கடலூர்:

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் குடிக்காமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியோ தங்கதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, உதவி ஆணையர் (கலால்) லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கியராஜ், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் பள்ளி மாணவர்கள் மது குடிப்பவரின் குடும்பத்தையும்,குலத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வறுமை ஏற்படும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகும். பசியின்றி உடல் நலம் குறையும்.

நினைவாற்றல் குறையும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன்ஹாலில் முடிவடைந்தது. இதில் புது நகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கலால் தாசில்தார் ஜான்சிராணி, இன்ஸ்பெக்டர்கள் (கலால்) பத்மாவதி, பாஸ்கர், வனிதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News