உள்ளூர் செய்திகள்
நேஷனல் கலை கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி
ஜெயங்கொண்டம் நேஷனல் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த வணிகவியல்கண் காட்சியில் கல்லூரி மாணவர்கள் ஏராளமான கண்காட்சி களை வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னதாக மனிதவி யல் துறைதலைவர் கோபி நாத் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். விழாவில் பேராசிரியர்கள் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பிரியதர்ஷினி உதவி பேராசிரியர் நன்றி கூறினார்.