உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-25 15:15 IST   |   Update On 2022-03-25 15:15:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பிச்சாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லதா, துரை, பன்னீர்செல்வம், குமார், சிவராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தனி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அணைக்கட்டு மலைப் பகுதியில் தொடங்கப்பட்ட 5 பள்ளிகளில் 15 ஆண்டுகளாக சத்துணவு திட்டம் செயல்படுத்த படாமல் உள்ளது. அதனை உடனே தொடங்க வேண்டும்.

அந்தப் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு லஞ்சம் வாங்காமல் அடையாள அட்டை வழங்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்.

கே.வி. குப்பம், விரிஞ்சிபுரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். மேல் அரசம்பட்டு அணைக்கட்டும் திட்டத்தை கட்டிமுடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Similar News