உள்ளூர் செய்திகள்
பொன்னேரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடை பெற்ற போது எடுத்த படம்.

பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 125 ஏக்கர் நிலங்கள் மீட்பு

Published On 2022-03-25 15:11 IST   |   Update On 2022-03-25 15:11:00 IST
ஜெயங்கொண்டம் பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருந்த 125 ஏக்கர் நிலங்கள் மீட்டகப்பட்டன.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளதுபொன்னேரி எனும் சோழகங்கம் ஏரி.  வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரி ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியால் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள்  விவசாயம் செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏரியின் அருகிலுள்ள சிலர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை பயிர் செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஏரி நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது தொடர்ந்து  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து வருவாய்த்துறையினர் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டனர்.

மேலும் அளவீடு செய்து அதில் பயிரிடப்பட்டுள்ள சாகுபடி பயிர்கள் அகற்றி கரை அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்து அதைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News