உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் வருகிற 30-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

Published On 2022-03-25 08:27 GMT   |   Update On 2022-03-25 08:27 GMT
ராணிப்பேட்டையில் வருகிற 30-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-22-ம் ஆண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30.3.22-  ந் தேதி முதல் 1.4.22-ந் தேதி வரை (3 நாட்கள்) நடைபெற உள்ளது. 

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் செல்ல வழங்கப்பட்டுள்ள பஸ் பாஸ் புதுப்பிக்கவும், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர் பணியிடத்திற்கு செல்ல பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பணிபுரியும் சான்றும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சென்று வருவதற்கான சிறப்பு பள்ளியில் இருந்து சான்று மற்றும் சிகிச்சை தொடர்பாக மருத்து வமனைக்கு சென்று வருவதற்கான மருத்துவ சான்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 3 மற்றும் யூ.டி.ஐ.டி. அட்டை அசல் மற்றும் நகலுடன் நேரில் வந்து இலவச பயணஅட்டை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Tags:    

Similar News