உள்ளூர் செய்திகள்
சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை - சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி

Published On 2022-03-25 11:46 IST   |   Update On 2022-03-25 11:46:00 IST
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளைக்குப்பம் சீனிவாசா நகரில் சாலை வசதி செய்து கொடுக்க அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

 அதன்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.19 லட்சத்துக்கு 38 ஆயிரம் மதிப்பில் சீனிவாசா நகரில் சாலை அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து  பணியை தொடங்கி  வைத்தார்.

நிகழ்ச்சியின் போது  சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொது மக்களிடம்  கூறியதாவது:-

 இப்பகுதியில்  மேலும் தார் சாலை மற்றும்  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை  எடுத்து வருகிறது. 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இணங்க 100 நாட்களும் வேலை  வழங்கி  உடனுக்குடன் வேலை செய்த பணத்தை வழங்கவும் உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை  எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் குப்புராமன், கிராம திட்ட ஊழியர் சங்கர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி சக்திவேல், புருஷோத்தமன், சங்கர், சுந்தரமூர்த்தி, ராஜா, செல்லவீரன், சுப்பிரமணியன், பாலு தணிகாசலம், முத்தமிழன், செல்வி, ஆனந்தி, லட்சுமி, கவுரி, சந்திரா, வித்யா, உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Similar News