உள்ளூர் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகளை குடிசை மாற்று வாரியம் மூலம் செயல்படுத்த வேண்டும்-எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
ஸ்மார்ட் சிட்டி பணிகளை குடிசைமாற்று வாரியம் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிசை மாற்று வாரிய ஊழியர்களுக்கு 9 மாத சம்பளம் வழங்கப்படாததால் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்வீடு கட்ட மானியத்தை உயர்த்திய அரசுக்கு சம்பள மின்றி, ஊழியர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள முடியவில்லையா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர பகுதிகளில் மேற்கொள்ள இருக்கும் பணிகளை 50 ஆண்டு அனுபவம் உள்ள வாரியத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். வாரியத்தில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஈடுபடுத்தி, குடிசை மாற்று ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.