உள்ளூர் செய்திகள்
வேலூரில் கால்வாய் சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
வேலூரில் கால்வாய் சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் சைதாப் பேட்டை 36-வது வார்டு நல்லெண்ண பிள்ளை தெருவை சேர்ந்த பொதுமக்கள் பி.டி.சி ரோட்டில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நல்லெண்ண பிள்ளை தெருவில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை அள்ளுவது இல்லை. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் உள்ள கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் மேல் போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
கால்வாயை சீரமைக்காததால் மழைக் காலங்களில் மலையில் இருந்து மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயை சீரமைக்க உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.