உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
வாலாஜாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
வாலாஜா தொட்டி நாகைய்யா தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன்(19) டிப்ளமோ படித்துள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ஹரிகரன் திடீரென மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.