உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பைரோஸ்கான், இவரது மனைவி நிஹானா வயது 23. இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கனவர் பைரோஸ்கான் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதகாலமாக அறந்தாங்கி தினசரி காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனிக் குடுத்தனம் செல்வது தொடர்பாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று குடும்பத்தினரோடு தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த நிஹானா தனது அறைக்கு சென்று அங்கிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகுடி காவல் துறையினர் விரைந்து சென்று நிஹானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.
அதே போன்று அறந்தாங்கி அருகே சிட்டாங்காடு கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் வயது 41 என்பவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்கோளாறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான அவர் வயலுக்கு பயன் படுத்தக்கூடிய மருந்தை குடித்துள்ளார். இதில் உயிருக்கு போராடிய முத்துக்குமாரை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.