உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2022-03-24 15:21 IST   |   Update On 2022-03-24 15:21:00 IST
புதுக்கோட்டையில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அடப்பன் வயல் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் அருண் குமார்(வயது36). இவரது மனைவி மகா லெட்சுமி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது.  2 பெண் குழந்தைகள். முதல் மகள் அரசு பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வருகிறாள்.  

இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு தூங்கும்போது கட்டிலில் படித்திருந்தவளுக்கு அவளது தந்தையே பாலியியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன் ஸ்பெக்டர் பத்மபிரியா வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்து இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரனை நடத்தி வருகிறார்.  

இதே போல் அன்னவாசல் அருகே தட்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(38). இவர் வீட்டின் அருகே அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக வசித்து வருகிறார்.

அவர் வீட்டில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதை பார்த்து பயந்த மாணவி அதை விரட்ட செல்வராஜை அழைத்துள்ளார். பாம்பு பிடிக்க வந்த செல்வராஜ் மாணவி தனியாக இருப்பதை அறிந்து அவரை கட்டிபிடித்து பாலியியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Similar News