உள்ளூர் செய்திகள்
இயற்கை சாகுபடிக்காக வயலில் கிடைகட்டப்பட்டுள்ள மாடுகள்.

மாடுகளை கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கும் விவசாயிகள்

Published On 2022-03-24 15:11 IST   |   Update On 2022-03-24 15:11:00 IST
வேதாரண்யம் பகுதியில் மாடுகளை கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு செட்டிபுலம், கரியாபட்டினம் உள்ளிட்ட 25&க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி வயல்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ரசாயன உரங்கள் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கின்றனர்.

குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் கட்டி மண்ணை வளமாக்கி இயற்கையான சாகுபடிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வை எதிர்நோக்கும் விவசாயிகளின் இந்த முயற்சியை மக்கள் பாராட்டுகின்றனர்.

Similar News