உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கந்தர்வகோட்டையில் உலக தண்ணீர் தினவிழா

Published On 2022-03-24 14:39 IST   |   Update On 2022-03-24 14:39:00 IST
கந்தர்வகோட்டையில் உலக தண்ணீர் தினவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  கவிதாராமு ஆலோசனையின்படி, கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆக்காசிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தின நாள் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப் பாளர்கள் தங்கராசு, ரஹ்மத்துல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை  தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது, உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ந் தேதியை உலக தண்ணீர் தினமாக குறிப்பிடுகின்றது.  

இந்த நாளில் நாம் தண்ணீரின் இன்றியமையாமையையும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், நீர்வளங்களை அளவோடு பயன் படுத்தவும்,  குடி நீரை வீணாக்காமல் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இது எதிர்கால சந்ததிக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய பங்களிப்பு என்பதையும் கூறினார்.

நிகழ்ச்சியில்  தன்னார்வலர்கள்  நித்தியா,  ஹேமலதா, மகேஸ்வரி, சுவேதா, புவனேஸ்வரி, மாலினி  மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  மணிமேகலை, ஆனந்தராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News