உள்ளூர் செய்திகள்
தேங்காய் பருப்பு ஏலம், மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
ஈரோடு விற்பனைக்குழு- பெருந்துறை ஒழுங் குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு:
ஈரோடு விற்பனைக்குழு- பெருந்துறை ஒழுங் குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு விற்பனைக் குழுவில் செயல்படும் 18 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஈரோடு மாவட்ட த்தின் முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கு என பெருந்துறை வட்டம் கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சியில் 15,200 மெ.டன் கொள்ளளவு உடைய கிடங்குகள், மஞ்சள் தரம் பிரிப்பு மையம் சூரிய உலர்த்தி மற்றும் நவீன சோதனைக் கூடங்களை உள்ளடக்கிய தரம் உயர்த்தப்பட்ட ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
புவிசார் குறியீடு பெற்றதும் உலகளவில் புகழ் பெற்றதுமான ஈரோடு மஞ்சளை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்திடவும் மின்னணு முறையில் ஏலம், மின்னணு பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் சந்தை திட்ட பயன்பாட்டினை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே பரவலாக்கம் செய்திடும் வகையிலும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் செயலி பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைகளையும் வகையிலும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒருங்கிணைந்ததிறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த் தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10,500 ஏக்கர் அளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னை விளையும் பரப்பினை கருத்தில் கொண்டும் தென் னை விவசாயிகள் தங்களது வினைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றை சந்தை படுத்துவதில் ஏற்படும் போக்குவரத்து செலவுகள் மற்றும் காலவிரயம் ஆகியவற்றை குறைக்கும் வகையிலும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.