உள்ளூர் செய்திகள்
கைது

பெண் தர மறுத்ததால் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் கைது

Published On 2022-03-24 12:35 IST   |   Update On 2022-03-24 12:35:00 IST
பண்ருட்டி அருகே பெண் தர மறுத்ததால் வீட்டுக்கு தீவைத்த வாலிபரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். இதற்கு முருகன் பெண் தர மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று மாலை முருகன் தனது குடும்பத்துடன் கொஞ்சிகுப்பம் பகுதியிலிருந்து பண்ருட்டிக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனை அறிந்துகொண்ட உத்திராபதி நேராக முருகனின் வீட்டிற்கு சென்று வீட்டுக்கு தீ வைத்தார்.

இந்த விபத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. பின்னர் பண்ருட்டியில் இருந்து வீடு திரும்பிய முருகன் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் உத்திராபதி மீது புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கு இரையான வீட்டை பார்வையிட்டு உத்திராபதியை கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News