உள்ளூர் செய்திகள்
கைது

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் அக்காள் கணவர் கைது

Published On 2022-03-24 12:30 IST   |   Update On 2022-03-24 12:30:00 IST
பண்ருட்டி அருகே நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காள் கணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண், கடலூர் பகுதியில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது அக்காள் கணவர் மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பரசன் (28). இவர் அடிக்கடி நர்சிங் மாணவியை சந்தித்து பேசுவது உண்டு. அதோடு அவ்வப்போது பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.

அப்போது அன்பரசன் நர்சிங் மாணவியிடம் உன்னையே திருமணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அன்பரசனுடன் சென்னைக்கு சென்றார்.

அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அந்த மாணவி கிடைக்கவில்லை. எனவே இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர்.

அப்போது மாணவியை அன்பரசன் ஆந்திராவிற்கு அழைத்து செல்ல பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார். இதனை அறிந்த போலீசார் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு சென்றபோது கையும் களவுமாக பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News