உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் சுடுகாட்டில் திடீரென பற்றி எரிந்த தீ.

அரக்கோணம் சுடுகாட்டில் திடீரென பற்றி எரிந்த தீ

Published On 2022-03-23 16:08 IST   |   Update On 2022-03-23 16:08:00 IST
அரக்கோணம் சுடுகாட்டில் திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
நெமிலி:

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் எரிவாயு தகன மேடை பகுதியின் எதிரே உள்ள ஒரு பகுதி இடுகாடு உள்ளது. 

நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சுடுகாடு பகுதியில் உள்ள புதருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 

சுடுகாடு பகுதி சுற்றிலும் குடியிருப்புகளும், டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

இதுகுறித்து மின்சார ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
 
பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News