உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2022-03-23 15:56 IST   |   Update On 2022-03-23 15:56:00 IST
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஈரோடு:

 பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.


ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி  கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடி நீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 88.49 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு  709 கனஅடி வீதம் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும் என மொத்தம் 700 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

Similar News