உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல்
பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே சோமகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி வாசுகி (வயது 50) இவருக்கு அம்மு கோபு என்ற 2 மகன்கள் உள்ளனர்.இவர் நேற்று மாலை வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது மகன்களை அதே பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் மதிவாணன் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதை பார்த்த வாசுகி இதுகுறித்து அவர்களிடம் தட்டிகேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அகஸ்டின் மதிவாணன் வாசுகியை தகாத வார்த்தையால் திட்டி கீழே தள்ளி அடித்து உதைத்தார். இதில் வாசுகி படுகாயமடைந்தார். இதுகுறித்து வாசுகி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அகஸ்டின் மதிவாணனை வலைவீசி தேடி வருகின்றனர்.