உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
பண்ருட்டியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவைச் சேர்ந்த ராஜி. இவரது மனைவி ரம்யா (வயது21). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று நேற்று முன்தினம் ரம்யா மற்றும் 2 குழந்தைகள் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. ரம்யா மற்றும் 2 குழந்தைகளை அவரது கணவர் ராஜி பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று பண்ருட்டி திருவதிகை ரெயில்வே பகுதியைச் சேர்ந்த அரி கோவிந்தன். இவரது மகள் நந்தினி (24) இவர் எம்.ஏ பி.எட் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல் போனார். இவரை அரிகோவிந்தன் தோழி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அரிகோவிந்தன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ரம்யா, அவரது குழந்தைகள், நந்தினி என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள் ? யாராலும் கடத்தப்பட்டாரா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.