உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
ஆலங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில் வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரெத்தினகுமார் தலைமை வசித்தார். பள்ளி தமிழாசிரியர் எட்வர்டு அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு குற்றச்செயல், போக்சோ சட்டம், பாலியல் பிரச்சனை மற்றும் புகையிலைப் பழக்கம், குழந்தை திருமணம் சட்டம் பற்றி எடுத்துரைத்தார்.
மூத்த வழக்கறிஞர் ராஜா மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்த னர். முடிவில் சட்டதன்னார்வலர் செந்தில் ராஜா நன்றி கூறினார்.