உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கிடா வெட்டி மக்கள் வழிபாடு

Published On 2022-03-23 15:11 IST   |   Update On 2022-03-23 15:11:00 IST
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாயொட்டி கிடா வெட்டி மக்கள் வழிபாடு செய்தனர்.
அந்தியூர்:

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாயொட்டி கிடா வெட்டி மக்கள் வழிபாடு செய்தனர்.

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. 

விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தெர்டர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தனம் என்கிற எருமைக் கிடா வெட்டும் விழா இன்று காலை நடந்தது. இதில் அந்தியூர் மற்றும் சற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 தொடர்ந்து வரும் 6-ந் தேதி குண்டம் விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

Similar News