உள்ளூர் செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செந்துறை அடுத்த பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ்(22). பொக்லைன் ஆப்ரேட்டான இவர், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பக்கத்து ஊரில் பொக்லைன் கொண்டு வேலை செய்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து இரும்புலிகுறிச்சி காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அன்புராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி அன்புராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அன்புராஜ் திருச்சி மத்தியை சிறையில் அடைக்கப்பட்டார்.