உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலி

Published On 2022-03-23 14:08 IST   |   Update On 2022-03-23 14:08:00 IST
மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் நகரில் வசித்து வருபவர் சண்முகம்(வயது55). இவர் வெள்ளனூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன் ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 6-ந் தேதி இவரது மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிபவர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழை  வைத்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சண்முகம் பலியானார்.  

இது குறித்து வெள்ளனூர் போலீசார் காரை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த ராஜாவை,  கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News